மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

தணிக்கை சான்றிதழ் பெற்ற 'ஆதார்'!

தணிக்கை சான்றிதழ் பெற்ற 'ஆதார்'!

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U/A’ சான்றிதழைப் பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

தற்போது இந்தப் படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U/A’ சான்றிதழ் பெற்றிருக்கிறது. ஆதார் அட்டையை மையப்படுத்தி சர்ச்சையைக் கிளப்பும் வகையிலான கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகியிருப்பதால், நிச்சயமாக சென்சாரில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் அது மாதிரியில்லாமல் படம் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் கிடைத்ததில் தயாரிப்பின் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

செவ்வாய் 10 மே 2022