மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 மே 2022

ஐபிஎல்: ஹைதராபாத்தை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு!

ஐபிஎல்: ஹைதராபாத்தை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு!

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று (மே 8) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் - விராட் கோலி களமிறங்கினர். ஹைதராபாத் பந்து வீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து கோலி டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் டூ பிளசிஸ் - ரஜத் பட்டிதார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டூ பிளசிஸ் பொறுப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். டூ பிளசிஸ் - ரஜத் பட்டிதார் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடத்தனர். அரை சதத்தை நெருங்கிய பட்டிதார் 48 ரன்களில் சுசித் பந்து வீச்சில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். 24 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடி காட்டினார். 50 பந்துகளில் 73 ரன்கள் குவித்த டூ பிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் வில்லியம்சன் - அபிஷேக் சர்மா இருவரும் டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். அவர்களைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி - மார்க்ரம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மார்க்ரம் 21 ரன்களில் வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து மற்ற வீரர்கள் பெங்களூரு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். குறிப்பாக 17ஆவது ஓவரை வீசிய ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

-ராஜ்-

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

திங்கள் 9 மே 2022