மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 மே 2022

சமந்தாவும் கவர்ச்சியும்...

சமந்தாவும் கவர்ச்சியும்...

நடிகைக்குத் திருமணம் ஆகிவிட்டால் அதையே காரணமாக வைத்து அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். முன்னணி நடிகருடன் திருமணமாகி, அதுவும் விவாகரத்தில் முடிந்தால் அந்த நடிகையை அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கே ஒப்பந்தம் செய்வார்கள்.

ஆனால், இவை அனைத்தில் இருந்தும் விடுபட்டு முன்னணி நாயகியாக தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்வேன் என்கிறார் நடிகை சமந்தா.

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு வாய்ப்பு இல்லை. தெலுங்கு, தமிழ்த் திரையுலகில் 26 வயதாகும் ராஷ்மிகா மந்தனா, 31 வயதாகும் பூஜா ஹெக்டே இருவரும் தங்கள் படங்களுக்கு கதாநாயகர்களால் முன்மொழியப்படும் நாயகிகளாக உள்ளனர். 35 வயது நிரம்பிய சமந்தா இவர்களுடன் களத்தில் போட்டியாளராக உள்ளார்.

தற்போது 'சாகுந்தலம், யசோதா' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் சமந்தா நடிப்பில் வரவிருக்கின்றன. விஜய் தேவரகொண்டா ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் வெற்றிக்கு பிரதான காரணமாக சமந்தா இருந்தார். நாக சைதன்யாவை விட்டு பிரிந்தபின் சமந்தா கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தொடங்கினார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி நடனத்திற்கு மேலாக கவர்ச்சியாக நடிக்க எதுவுமில்லை. இருந்தபோதிலும் தன் மீது ரசிகர்களுக்கு ஆர்வம், ஈர்ப்பு குறைந்துவிடாமல் இருக்க கவர்ச்சியின் கடைசி எல்லைக்கே சென்றுள்ளார் சமந்தா. சில தினங்களாக ஒரு ஆங்கில பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சமந்தா. அந்தப் பத்திரிகையின் பேட்டியிலும் கவர்ச்சியாகவும், ஆக்‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என சொல்லியிருக்கிறார்.

"எனது நிறத்துக்காக எனக்கு நம்பிக்கை வருவதற்கு சில காலங்கள் ஆனது. ஆனால், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும், ஆக்‌ஷன் கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய நம்பிக்கை வந்துள்ளது. எனது கடந்த காலங்களில் அப்படி நடிக்க எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது என்று சொல்லலாம். வயதும் அனுபவமும் அதற்கு ஒரு காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

திங்கள் 9 மே 2022