மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

பிக்பாஸ் ஜோடிகள் சீசன்2 எப்போது? யார் யார் ஜோடிகள்?

பிக்பாஸ் ஜோடிகள் சீசன்2 எப்போது? யார் யார் ஜோடிகள்?

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் வர இருக்கிறது. இந்த புது சீசனில் தொகுப்பாளர்கள் யார், ஜோடிகள் நடுவர்கள் யார் யார்?

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புகழ் பெற்ற விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தியது.

இப்பொழுது அதன் இரண்டாவது சீசன் இந்த வாரம் ஞாயிறு, 8ம் தேதி இரவு 7.30 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஃபோக் பாடல்கள், வெஸ்டர்ன் பாடல்கள் என தமிழ் சினிமாவின் ஹிட் பாடல்களுக்கு ஜோடிகள் நடனமாட இருக்கிறார்கள்.

கடந்த சீசனில் அனிதா, ஷாரிக், ரேகா, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் பிக்பாஸ் ஜோடிகளாக கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இந்த சீசனில் ரியல் ஜோடிகளாக தாமரை அவரது கணவர் பார்த்தசாரதி, சுஜா வருணி அவரது கணவர் சிவக்குமார் ஆகியோரும் ரீல் ஜோடிகளாக ஐக்கி பெர்ரி- தேவ் மஜோர், இசைவாணி- வேல்முருகன், அமீர்- பாவ்னி, கணேஷ்- ஹாரத்தி, அபிஷேக்- சுருதி ஆகியோர் ஜோடிகளாக கலந்து கொள்ள உள்ளனர்.

நிகழ்ச்சியை பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் வெற்றியாளரான ராஜூ மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் இருக்கின்றனர்.

ஆதிரா

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

சனி 7 மே 2022