மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

திருப்பதியில் நயன் - விக்கி- திருமண முடிவா?

திருப்பதியில் நயன் - விக்கி- திருமண முடிவா?

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அனிருத் இசையில் பாடல்களும் ஹிட்.

படம் குறித்தான பேட்டிகளின் போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் கதையை 'நானும் ரெளடிதான்' படத்திற்கு முன்பே வைத்திருந்ததாகவும் கதை நயன்தாராவிடம் சொன்ன போது அவருக்கும் மிகவும் பிடித்திருந்ததாகவும் இந்த கதையை படமாக்கிய பின்பே தங்களது திருமணம் என அப்போது பேசிக் கொண்டோம் எனவும் கூறியிருந்தார் விக்னேஷ் சிவன்.

மேலும், படம் வெளியாவதற்கு முன்பு இருவரும் படத்தின் வெற்றிக்காக திருப்பதி சென்று தரிசனம் செய்து அந்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்கள்.

இப்போது படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் திருப்பதியில் மீண்டும் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளது இந்த ஜோடி. நயன்தாராவுடனான புகைப்படத்தை பகிர்ந்து, 'திருப்பதிக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறோம். படம் ப்ளாக் ப்ஸ்டர் ஹிட் பெற வேண்டும் என வேண்டி கொண்டோம். வெங்கடாசலபதி அதை கொடுத்துள்ளார். உங்கள் அனைவரது அன்பு, ஆசீர்வாதம் மற்றும் ஆதரவிற்கு நன்றி. இதை மட்டுமே நாங்களும் எதிர்ப்பார்க்கிறோம்' எனவும் பகிர்ந்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் விக்கி- நயன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளையும் இந்த திருப்பதி விசிட்டில் விக்கி செய்திருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இருவருக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ள நிலையில் திருமணம் கோவிலில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும்படி நடக்க இருக்கிறது.

மேலும் ரிசப்ஷன் மாலத்தீவுகளில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆதிரா.

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

சனி 7 மே 2022