மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

'ஜெய்பீம்': சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்கு பதிவு!

'ஜெய்பீம்': சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்கு பதிவு!

'ஜெய்பீம்' படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்குப்பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஜெய்பீம்' படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் த.சா.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதே சமயம் படத்தின் பல காட்சிகள் வன்னியர்களை இழிவு படுத்தும் வகையில் இருக்கிறது என சர்ச்சையும் எழுந்தது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படம் வெளியான சமயத்தில் தயாரிப்பாளரான சூர்யா மீது தாக்குதல் நடத்துவோம் என காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து நடிகர் சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மேலும் படத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்து, இயக்குநர் ஞானவேலும் மன்னிப்பும் கோரினார்.

ஆனாலும், இந்த பிரச்சனை தொடர்பாக வன்னிய சேனா எனும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

'ஜெய்பீம்' படத்தில் வன்னியர்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்ட புகாரை வேளச்சேரி காவல்துறை ஏற்கவில்லை என கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் ருத்திர வன்னிய சேனா நிறுவன தலைவரான சந்தோஷ்.

அவர் அளித்திருந்த மனுவில், 'வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசாத வட இந்தியரை கன்னத்தில் அறையும் காட்சி மூலமாக கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள்.

பச்சையம்மாள் என்ற பெயர் வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே வைக்கப்படும் பெயர் எனும் போது அதனை இருளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வைத்திருப்பது எங்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது போல உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் படத்தில் வன்னியர்களை இழிவுப்படுத்தும் முகாந்திரம் இருக்கிறது என கூறி வேளச்சேரி காவல்துறை இன்னும் ஐந்து நாட்களில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை வருகிற 20ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆதிரா

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வியாழன் 5 மே 2022