மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 மே 2022

ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று (மே 3) இரவு நடைபெற்ற 48ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷி தவன் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சாஹா - சாய் சுதர்ஷன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரபாடா பந்து வீச்சில் சாஹா, அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் பாண்டியா ஒரு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஒரு முனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கியது. இருப்பினும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 42 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். சாய் சுதர்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஷமி பந்து வீச்சில் சங்வானிடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோவ் ஒரு ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜபக்சா, தவான் உடன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக விளையாடிய ராஜபக்சா குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தவான் அரை சதம் கடந்து அசத்தினார்.

5 பவுண்டரி 1 சிக்சருடன் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பின்னர் லிவிங்ஸ்டோன் களமிறங்கினார். ஷமி வீசிய 16ஆவது ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை அவர் பறக்கவிட்டார்.

இறுதியில் 16 ஓவர்களில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. குஜராத் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நடப்பு தொடரில் குஜராத் அணி இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

இன்று (மே 4) இரவு நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பது ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றி, ஆறில் தோல்வி என்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து ஒன்பதாவது இடத்திலேயே இருக்கிறது.

எஞ்சிய ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்த ஆட்டத்தின் வெற்றி சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

-ராஜ்-

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 4 மே 2022