மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 மே 2022

பிரசவத்துக்கு பின்னான மன அழுத்தம்- ஆல்யா பதில்!

பிரசவத்துக்கு பின்னான மன அழுத்தம்- ஆல்யா பதில்!

'ராஜா ராணி' சீரியல் புகழ் நடிகை ஆல்யா தன்னுடைய பிரசவத்துக்கு பிறகு மன அழுத்தம் இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகை ஆல்யாவுக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு மன அழுத்தம் உருவாகும். அப்படி வரும் மன அழுத்தத்தை எப்படி சமாளித்தீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆல்யா பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் ஆல்யா மானசா. இதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. முதல் குழந்தை பிறப்புக்கு பிறகே ‘ராஜா ராணி2’ சீரியலில் நடித்து வந்தார். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது குழந்தைக்கு தாயானார் ஆல்யா.

இதனால், சீரியலில் இருந்து கடந்த மார்ச் மாத இறுதியில் இவர் விலக, இவருக்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது ஆல்யாவுக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்பொழுது நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து இருப்பவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

அதில் ரசிகர் ஒருவர், ‘இரண்டு குழந்தைகளின் பிரசவத்துக்கு பிறகான டிப்ரஷனை எப்படி கடந்து வந்தீர்கள்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, ‘நீங்கள் சொல்வது போல பிரசவத்துக்கு பிறகு எந்தவிதமான மன அழுத்தத்தையும் நான் சந்திக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய கணவரும் அவருடைய வீட்டை சார்ந்தவர்களும் தான். என்னையும் என் குழந்தைகளையும் நன்றாக கவனம் எடுத்து பார்த்து கொண்டார்கள். அதனால், எந்த விதமான மன அழுத்தமும் எனக்கு இல்லை. இது போல ஒரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தாயாகும் எல்லா பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இது போன்ற மன அழுத்தம் உருவாகாமல் இருக்க, நிச்சயம் குடும்பத்தின் ஆதரவு அனைவருக்கும் தேவை. அது கிடைக்கும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

இன்னொருவர், ‘நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள்?’ என கேட்டதற்கு ‘நான் பிசினஸ் செய்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருந்த போது என் குடும்பத்தில் அனைவருமே டெக்ஸ்டைல் தொழில் செய்து கொண்டிருந்தார்கள்’ என கூறியுள்ளார் ஆல்யா.

குழந்தை பிறப்புக்கு பின் மீண்டும் 'ராஜா ராணி' சீரியலில் ஆல்யா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இல்லை என மறுத்து, இனி சந்தியா கதாப்பாத்திரத்தில் ரியாவே நடிப்பார் என கூறி இருந்தார். மீண்டும் புதிய சீரியலில் எண்ட்ரி கொடுப்பேன் எனவும் ஆல்யா கூறியிருந்தார்.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

செவ்வாய் 3 மே 2022