மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

'பிகில்' பட புகழ் காயத்ரிக்கு நிச்சயம்!

'பிகில்' பட புகழ் காயத்ரிக்கு நிச்சயம்!

'பிகில்' படம் மூலம் தமிழில் அறிமுகமான காயத்ரி ரெட்டிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

2019-ல் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்த படம் 'பிகில்'. தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் 'பிகில்' பெண்களாக வர்ஷா, ரெபா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காயத்ரியின் கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கவினின் 'லிஃப்ட்' படத்திலும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் பிறகு 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி வலிமையான ஒரு போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 29ம் தேதி தனக்கு நிச்சயம் நடந்ததை புகைப்படங்கள் பதிவிட்டு, 'நீயும் நானும் இறுதிவரை கைக்கோர்த்து' என அழகான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார் காயத்ரி.

மேலும், விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதை கூறியிருப்பவர் தன்னுடைய கணவர் பத்தின அனைத்து விவரங்களையும் திருமணம் நெருங்கும் சமயத்தில் சொல்வேன் என்றும், அவருடைய ப்ரைவசிக்காகவே எந்த விவரத்தையும் பதிவிடவில்லை எனவும் கூறி இருக்கிறார். மேலும், இது வீட்டில் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி இருப்பவர், திருமணத்திற்கு பின்பு கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆக இருக்கிறார்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார் காயத்ரி.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 1 மே 2022