மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 ஏப் 2022

அஜித் பிறந்தநாளில் அறிவிக்கப்படும் ‘ஏகே61’ டைட்டில்?

அஜித் பிறந்தநாளில் அறிவிக்கப்படும் ‘ஏகே61’ டைட்டில்?

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே1 அன்று அவரது 61வது பட டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனை ஒட்டி ரசிகர்கள் இப்பொழுதே இணையத்தில் அவருக்கு வாழ்த்துகள், காமன் டிபி என கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.

அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது படம் குறித்தான அப்டேட்டை ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ‘ஏகே61’ பட அப்டேட் தான் ரசிகர்களின் தற்போதைய எதிர்ப்பார்ப்பு.

குறிப்பாக, அஜித் பிறந்தநாளை ஒட்டி அந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘வலிமை’ படத்தின் பூஜை ஆரம்பிக்கும் போதே படத்தின் தலைப்பு அப்போதே தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது.

வங்கி கொள்ளை தான் படத்தின் ஒரு வரி. இதில் அஜித் எதிர்மறை கதாப்பாத்திரம் கொண்ட கதாநாயகனாக நடிக்கிறார். தபு, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு கதாநாயகிகள். இதில் தபு 25 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்க இருக்கிறார். ஹெச். வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ரகுல் ஏற்கனவே நாயகியாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ படத்தில் வேலை செய்த டெக்னிக்கல் டீம் கிட்டத்தட்ட இந்த படத்திலும் வேலை செய்கிறது. போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித் இந்த படத்திற்கு என மொத்தம் 60 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் அக்டோடபர் மாதம் படப்பிடிப்பு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வெள்ளி 29 ஏப் 2022