மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஏப் 2022

இந்திய அணியில் மீண்டும் நடராஜன்: கவாஸ்கர்

இந்திய அணியில் மீண்டும் நடராஜன்: கவாஸ்கர்

தமிழக வீரர் நடராஜன் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

வேகமெடுத்துள்ள ஐபிஎல் 2022 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் ஏழு ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்த சீசனில் யசுவேந்திர சாஹலுக்கு (ராஜஸ்தான்) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நடராஜனை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஹைதராபாத் அணி தக்கவைத்து கொண்டது. குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜனை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், "காயத்தில் இருந்து மீண்டு ஐபிஎல்லில் ஆடி வரும் நடராஜனின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் தற்போது நன்றாகப் பந்து வீசுகிறார். காயத்தால் அவரை இந்திய அணி இழந்து இருந்தது. அவர் மீண்டும் போட்டி களத்தில் இருப்பார். 16 முதல் 20 ஓவர்கள் வரை பந்து வீசுவதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

நடராஜன் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதை அவர் நோக்கமாக கொண்டுள்ளார்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

-ராஜ்-

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

செவ்வாய் 26 ஏப் 2022