மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஏப் 2022

டேக் டைவர்ஷன்: பாராட்டிய கே.ஜி.எஃப் இயக்குநர்!

டேக் டைவர்ஷன்: பாராட்டிய  கே.ஜி.எஃப் இயக்குநர்!

ஆர்வமும், திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் தயாராகியுள்ள படம் "டேக் டைவர்ஷன்". சிவானி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவரும், கூத்துப் பட்டறையில் பத்தாண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றவருமான சிவகுமார் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

பேட்ட, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார். ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இசை ஜோஸ் பிராங்க்ளின். எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்.

திருமலை, தென்குமரி முதல் ‘பையா’ படம் வரையிலும் பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படமும் இணையும் என்கிறார் இயக்குநர்.

டேக் டைவர்ஷன்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கே.ஜி.எஃப். இயக்குநர் பிரசாந்த் நீல் படக் குழுவினரைப் பாராட்டிவாழ்த்தியுள்ளார். டேக் டைவர்ஷன் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் கே.ஜி.எஃப் படக் குழுவினரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார். ‘கே.ஜி.எஃப்.’ படத்தில் நிறையத் தமிழ் நடிகர்களும், தமிழ் பேசும் தொழில் நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற வேண்டியிருந்தது.இந்நிலையில் சிவாவைப் பிடித்துப்போய் அவருக்கு ‘கே.ஜி.எப்.’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பு வாய்ப்பைத் தந்ததுடன் உதவி இயக்குநராகவும் அவரை அருகில் வைத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

இப்படி ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு ஆண்டு காலம், படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரையும் பணியாற்றியவர்தான் நடிகர் சிவா.

சிவா நாயகனாக அறிமுகமாகும் இந்த டேக் டைவர்ஷன் படத்தின் ட்ரெயிலரைப் பார்த்து கே.ஜி.எஃப். படத்தின் இயக்குநரான பிரசாந்த் நீல் பெரிதும் பாராட்டியிருக்கிறார். படத்தின் டிரெய்லர் இதுவரையிலும் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இப்படத்திற்காக தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.இந்த ‘டேக் டைவர்ஷன்’ படம் வரும் மே 6-ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

-இராமானுஜம்

'அஜித்துடன் இருப்பது அல்டிமேட்டான விஷயம்'- தயாநிதி அழகிரி!

4 நிமிட வாசிப்பு

'அஜித்துடன் இருப்பது அல்டிமேட்டான விஷயம்'- தயாநிதி அழகிரி!

அண்ணாமலை பட டீசர் தள்ளிப்போனது ஏன்?

4 நிமிட வாசிப்பு

அண்ணாமலை பட டீசர் தள்ளிப்போனது ஏன்?

விக்னேஷ் சிவனின் குழப்பமான 66 கோடி ரூபாய் அறிவிப்பு

3 நிமிட வாசிப்பு

விக்னேஷ் சிவனின் குழப்பமான 66 கோடி ரூபாய் அறிவிப்பு

சனி 23 ஏப் 2022