மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஏப் 2022

'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது?

'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்தில் இணைகிறார். இதில் விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மே முதல் வாரத்தில் துபாயில் இதன் ஆடியோ லான்ச் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இதனை உறுதி படுத்தி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பிரம்மாண்டமான முறையில் நடக்க இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'பீஸ்ட்', 'கே.ஜி.எஃப்2', 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'டான்' ஆகிய படங்களுக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் கமலின் 'விக்ரம்' படம் மீது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வியாழன் 21 ஏப் 2022