மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

ஓடிடியில் வெளியாகும் கனா காணும் காலங்கள்!

ஓடிடியில் வெளியாகும் கனா காணும் காலங்கள்!

சின்னத்திரையில் ரசிகர்களிடையே வெற்றி பெற்ற 'கனா காணும் காலங்கள்' தொடரின் அடுத்த சீசன் இப்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

பள்ளிக்காலங்களின் சேட்டைகள், நட்பு, ஆசிரியர்- மாணவர் அன்பு, காமெடி என இளமை துள்ளலான தொடராக 2006ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் வெற்றி அடைந்த பிறகு முதல் சீசனில் நடித்த பலர் பள்ளி முடித்து கல்லூரிக்கு செல்லும் போது அங்கு அவர்களின் வாழ்க்கை, அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என சொல்லும் விதமாக அடுத்த சீசன் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது.

இப்போது இந்த இரண்டு சீசன்களும் நிறைவடைந்து சில வருடங்கள் ஆகி இருக்கும் நிலையில் 'கனா காணும் காலங்கள்' சீரியலின் புது சீசன் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 22ம் தேதி முதல் 130 எபிசோடுகள் கொண்ட தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது.

புது சீசன் என்பதால் கதைக்களம், நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் என அனைவரையுமே புதிதாக எடுத்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இதற்கான செட் அமைத்து படப்பிடிப்பும் நடத்தி இருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் பிரபலமான சிலரும் இதில் நடிக்கிறார்கள்.

மேலும், 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் இர்ஃபானும் இதில் சிறப்பு தோற்றத்தில் வரவிருக்கிறார். 'பிக்பாஸ்- அல்டிமேட்' ஓடிடி தளத்தில் முடிவடைந்த பிறகு அடுத்த கட்டமாக ஓடிடி பார்வையாளர்களுக்காகவே பிரத்யேகமாக 'கனா காணும் காலங்கள்' புது சீசனை ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம் விஜய் டிவி.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 20 ஏப் 2022