uஐபிஎல்: சென்னையை வீழ்த்தி குஜராத் முதலிடம்!

entertainment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் தொடரில் நேற்று (ஏப்ரல்) நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற குஜராத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்பட்டார்.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த போட்டியில் ஹீரோவாக ஜொலித்த உத்தப்பா, இந்தப் போட்டியில் மூன்று ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ஒரு ரன்னில் தனது விக்கெட்டைப் பறி கொடுத்தார்.
மறுபுறம் ருதுராஜ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து அம்பத்தி ராயுடு நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ராயுடு பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினார். அவர் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சிவம் துபே, ஜடேஜா கடைசி நேரத்தில்அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது .
170 ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், விருத்திமான் சஹா களமிறங்கினர். தொடக்கத்தில் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த விஜய் ஷங்கரும் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து அபினவ் மனோகர் ரன்களிலும், விருத்திமான் சஹா 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து வந்த டேவிட் மில்லர் ,அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி பறக்கவிட்ட மில்லர் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
பிறகு திவாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரஷித் கான் அதிரடியாக விளையாடினார். மில்லர், ரஷித் கான் இருவரும் சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர் .பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிக்கு பறக்க விட்டனர் .
ஜோர்டன் வீசிய போட்டியின் 18ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விரட்டினார் ரஷித் கான். சிறப்பாக விளையாடிய அவர் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது . ஜோர்டன் அந்த ஓவரை வீசினார். அந்த அவரை எதிர்கொண்ட மில்லர் அணியை வெற்றி பெற செய்தார்.
இதனால் 19.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி, ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் லக்னோ அணியும், மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியும், நான்காவது இடத்தில் ஹைதராபாத் அணியும் உள்ளது.
இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *