மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஏப் 2022

செய்தி வாசிப்பாளர் கண்மணி- நவீன் நிச்சயதார்த்தம்!

செய்தி வாசிப்பாளர் கண்மணி- நவீன் நிச்சயதார்த்தம்!

செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் சின்னத்திரை நடிகர் நவீனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

செய்தி வாசிப்பாளராக ரசிகர்களிடையே பிரபலமானவர் கண்மணி. இவரும் சின்னத்திரை நடிகருமான நவீனும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டார் தரப்பிலும் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது என இரு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். விரைவில் நிச்சயதார்த்தம் திருமணம் குறித்து அறிவிப்போம் என நவீன் கண்மணி கூறி வந்த நிலையில் நேற்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே-சீசன்2'ல் நவீன் நடித்து வருகிறார். இதன் முதல் சீசனில் தான் இவர் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

இவருக்கும் 'இதயத்தை திருடாதே' சீரியல் நாயகி ஹீமாவுகும் காதல் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் இருவருமே அந்த செய்தியை மறுத்து, 'நாங்கள் இருவரும் நண்பர்கள்' என தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று கண்மணி மற்றும் நவீனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஜூன் மாதத்திற்கு மேல் திருமணம் என சொல்லப்படும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இந்த ஜோடி விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆதிரா

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சனி 16 ஏப் 2022