மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஏப் 2022

ஐபிஎல்: அடுத்தடுத்து ஐந்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வி!

ஐபிஎல்: அடுத்தடுத்து ஐந்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வி!

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மும்பை அணி விளையாடியுள்ள ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது.

23ஆவது லீக் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினார். தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 28 ரன்களிலும், இஷான் கிஷன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .

பின்னர் வந்த திலக் வர்மா, டெவால்ட் பிரீவிஸ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராகுல் சஹர் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு வாண வேடிக்கை காட்டினார் டெவால்ட் பிரீவிஸ்.

தொடர்ந்து விளையாடிய அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா 36 ரன்களிலும், பொல்லார்டு 10 ரன்களிலும் (ரன் அவுட்) ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது .

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில், மும்பை அணி விளையாடியுள்ள ஐந்து போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வி அடைந்திருக்கிறது. இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் தற்போது மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 14) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வியாழன் 14 ஏப் 2022