மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஏப் 2022

பீஸ்ட்' பட ஆரம்பம் முதல் இறுதி நாள் தடை வரை!

பீஸ்ட்' பட ஆரம்பம் முதல் இறுதி நாள் தடை வரை!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை பார்க்கலாம்.

*'மாஸ்டர்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வந்தது. இதனை ஒரு நேர்காணலில் முருகதாஸ்ஸூம் உறுதி செய்தார். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் படத்தில் இருந்து விலக நெல்சன் திலீப்குமார் விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

*படத்தின் நாயகியாக ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல முன்னணி நாயகிகளது பெயர்கள் அடிபட இறுதியாக பூஜா ஹெக்டே கமிட் செய்யப்பட்டார். விஜய்யின் 66 படத்தில் இப்போது ராஷ்மிகா நடிக்கிறார்..

பீஸ்ட் படப்பிடிப்பு முதலில் சென்னையில் 'அரபிக்குத்து' பாடலுடன் செட் போட்டு ஆரம்பித்து பின்பு ஜார்ஜியா மீண்டும் சென்னை என பயணித்தது. ஜார்ஜியா படப்பிடிப்பு சமயத்தின் போது கொரோனா லாக்டவுன் தீவிரமாக படக்குழு திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியது.

படத்தில் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றை கோகுலம் ஸ்டுடியோஸ்ஸில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள்.

வழக்கமாக நடிகர் விஜய் தனது படங்களுக்கு ஆடியோ லான்ச்சில் கலந்து கொண்டு பேசுவது வழக்கம். ஆனால், 'பீஸ்ட்' படத்திற்கு இல்லாமல் போகவே பத்து வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதை நேர்காணல் செய்தவர் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன்.

இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக காட்டி, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிக்கை வெளியிட்டது. மேலும், குவைத் உள்ளிட்ட சில நாடுகளிலும் படம் வெளியாகவில்லை.

படத்தின் மற்றொரு சர்ப்ரைஸ் இயக்குநர் செல்வராகவன். நடிகராக அவருக்கு முதல் படம் 'சாணிக்காயிதம்'. ஆனால், முதலில் வெளியாகி இருப்பது நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் தான்.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

புதன் 13 ஏப் 2022