ஆர்சிபி அணியுடன் கேஜிஎஃப்!


தற்போது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் என்பதால் வழக்கமான விளம்பர யுக்தியில் இருந்து மாறுபட்டு யோசித்த கேஜிஎஃப் படக்குழு அதனை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'கேஜிஎப் 2' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக படக்குழுவினர் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். இப்படத்திற்கு பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணியான ஆர்சிபி அணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது 'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனமான ஹம்பலே பிலிம்ஸ். இந்தப் புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பை வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர். படத்தின் டிரைலருடன் ஆர்சிபி அணி வீரர்கள் அதன் கேப்டன் டூ பிளிசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகம்மது சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் பங்கேற்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
-இராமானுஜம்