மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

ஐபிஎல்: லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் முதலிடம்!

ஐபிஎல்: லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் முதலிடம்!

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) இரவு 7.30 மணிக்கு நடந்த 20ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலில் இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் படிக்கல் சாம்சன், ராசி வான்டெர் டுசன் என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 70 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ஹெட்மயர், அஸ்வின் இருவரும் நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்தனர்.

ஹெட்மயர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் அடித்தார் . இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. தொடக்கத்தில் ராகுல், கிருஷ்ணப்பா கவுதம், ஹோல்டர் என அடுத்தடுத்து 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. டி காக் மற்றும் தீபக் ஹூடா ஓரளவு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். ஹூடா 25 ரன்களிலும், டிகாக் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துகளை சிக்ஸர், பவுண்டரிக்கு பறக்க விட்டார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் குலதீப் சென் வீசினார். அந்த ஓவரில் அவர் 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். லக்னோ அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது . இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் சார்பில் சஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். லக்னோ அணியில் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார் .

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி, மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், மூன்றாவது இடத்தில் குஜராத் அணியும், நான்காவது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன.

இன்று (ஏப்ரல்11) இரவு 7.30 மணிக்கு 21ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 11 ஏப் 2022