மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஏப் 2022

'டான்’ விநியோக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

'டான்’ விநியோக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

தமிழ் சினிமாவில் பிரச்சினைகள் இன்றி படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களின், திரையரங்குகளின் முதல் விருப்பமாக உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் உள்ளது.

மார்ச் 25 அன்று வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. ஆனால் அந்த நிறுவனம் தயாரித்துள்ள ‘டான்’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

எந்தவொரு படத்தையும் அவுட்ரேட் அடிப்படையில் இந்த நிறுவனம் வாங்குவதில்லை, படத்தின் தன்மைக்கு ஏற்ப அட்வான்ஸ் தொகை அல்லது திரையரங்குகள் மூலம் வசூலிக்கப்படும் முன்பணம் இவை மட்டுமே தயாரிப்பாளருக்கு வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் மினிமம் கேரண்டி அடிப்படையில் படங்களை திரையிடாமல் அட்வான்ஸ் முறையில் ஒப்பந்தம் செய்யப்படுவதால் திரையரங்குகளுக்கு படம் ஓடவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்படாது. அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெற முடியும் என்பதால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படங்களை திரையிடுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளுடன் நேரடி தொடர்பை கையாள தொடங்கியுள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம். தமிழகத்தில் தற்போது உள்ள 80% திரைகள் தொழில் ரீதியாக மறைமுகமாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஏப்ரல் மாதம் "பீஸ்ட்", ஜூன் மாதம் "டான்", அதனை தொடர்ந்து "விக்ரம்" என முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமைகளை தேடிப் போகாமல் தன்வசப்படுத்தி வருகிறதுரெட் ஜெயண்ட் நிறுவனம்.

அந்த அடிப்படையிலேயே டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ‘டான்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு வழங்கும் பூர்வாங்க நிகழ்வு நேற்று (6.04.2022) நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு, ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா. சி ஆகியோர் பங்கேற்றனர்.

-அம்பலவாணன்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வியாழன் 7 ஏப் 2022