மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம்!

வரலட்சுமி சரத்குமார்  நடிக்கும் புதிய படம்!

மஹா மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேந்திரநாத் கோண்ட்லா தயாரித்து வரும் திரைப்படம் சபரி.

இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இதுவரையிலும் அவர் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம் ஷெட்டி, மைம் கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குநராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத் தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். அனில் காட்ஸ் எழுதி, இயக்குகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய பன்மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக தொடங்கப்பட்டது. சபரி படத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் கூறுகையில், “சபரி திரைப்படம் காதல் மற்றும் க்ரைம் கலந்த கதையாகும், மேலும், இது ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் டைப்பில் உருவாகிறது” என்றார்.

ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கொடைக்கானலில் உள்ள சில இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

-அம்பலவாணன்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 5 ஏப் 2022