மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

எ பியூட்டிஃபுல் பிரேக் அப்: இளையராஜாவுக்கு விருது!

எ பியூட்டிஃபுல் பிரேக் அப்: இளையராஜாவுக்கு விருது!

ஆம்ஸ்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜா சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருதை வென்றுள்ளார்.

இயக்குனர் அஜித்வாசன் உக்கினாவின் இந்தோ-ஆங்கில திரைப்படமான

‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ படத்திற்கு இசையமைத்ததற்காக இளையராஜா இந்த விருதைப் பெற்றுள்ளார். இந்தத் தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் சர்மார்கோ ராபின்சன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்அப்' திரைப்படம் அதிக மதிப்பெண்களை பெற்று சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் படத்தில் ராஜாவின் இசை நம்பமுடியாத அழகான இசை என்று படக்குழு தெரிவித்துள்ளது. இளையராஜாவின் 30 ஒரிஜினல் ஒலிப்பதிவுகளைக் கொண்ட இந்தப் படம், இங்கிலாந்தைச் சேர்ந்த A5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அறிமுக நடிகர்களான க்ரிஷ் மற்றும் மேட்டில்டா ஆகியோர் நடித்தனர்.

-அம்பலவாணன்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

செவ்வாய் 5 ஏப் 2022