மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

பீஸ்ட் பட வில்லன் யார்?

பீஸ்ட் பட வில்லன் யார்?

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் வில்லன் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

’டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்திற்காக முதன் முறையாக இணைந்துள்ளார். இந்த மாதம் 13ஆம் தேதி படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தில் இருந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி உள்ளது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைய்லர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் மால் ஒன்றை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருக்க அதில் காவல் துறையைசேர்ந்த விஜய்யும் மாட்டி கொள்கிறார். அவர் எப்படி தீவிரவாதிகளிடம் இருந்து பொது மக்களை காப்பற்றுகிறார் என்பதை பரபர ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

'பீஸ்ட்' படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என முன்பு தகவல்கள் வெளியான நிலையில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ ட்ரைய்லரில் முகமூடி அணிந்து வித்தியாசமான மேக்கப்போடு கடத்தல் கும்பலை சேர்ந்தவராக காண்பிக்கப்பட்டிருக்கிறார்.

அதனால், படத்தின் வில்லன் அவர் தான் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சைன் டாமும் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை உறுதி படுத்தி உள்ளார்.

'பீஸ்ட்' படத்திற்கான எமோஜி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' பாடல்கள் தவிர மூன்றாவது பாடலான 'திரை தீப்பிடிக்கும்' தீம் சாங்க் படம் வெளியாவதற்கு முன்பு, அதாவது இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 5 ஏப் 2022