மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம் உடனே நடக்க காரணம்!

ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம் உடனே நடக்க காரணம்!

இந்தி நடிகர் ரன்பீர் கபூர், நடிகை கத்ரீனா கைஃப் இருவரும் காதலித்து வந்தனர். இருவரது காதலும் முடிவுக்கு வந்த பின் கத்ரீனா கடந்த வருடம் டிசம்பர் 9 அன்று விக்கி கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண விழா பிரம்மாண்டமாக ஒரு வார காலம் நடைபெற்றது.

கத்ரீனாவுடனான காதல் முறிவுக்குப் பின் ஆலியாபட் - ரன்பீர் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. கத்ரீனா திருமணம் செய்துகொண்டதால் தனது திருமணத்தையும் உடனே நடத்த ரன்பீர் கபூர் விருப்பம் தெரிவித்ததால் ஆலியா பட்டும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமணம் ஏப்ரல் மாதம் நடக்கலாம் என யூகமாக செய்திகள் வெளியாகி வந்தன

தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளனர் ரன்பீர் தரப்பில். ஆலியாபட் தாத்தா ரஸ்தான் உடல்நிலை மோசமாக இருக்கிறது. இதனால் திருமண தேதியை முடிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில்தனது பேத்தியின் திருமணத்தை பார்க்கவேண்டும் என்பதில் தாத்தா ரஸ்தான் ஆர்வமாக இருக்கிறார்.

எனவே அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஏப்ரல் 17ம் தேதி திருமணத்தை நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். கத்ரீனா கைஃப் திருமணம் போன்று இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக மிக எளிமையாக திருமண நிகழ்வை நடத்தி முடிக்க திட்டமிட்டு வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

திருமண விழாவிற்கு திரைப்பட நட்சத்திரங்கள் அனைவரையும் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இருக்கும் என கூறப்படுகிறது. மும்பை செம்பூரில் உள்ள ஆர்.கே.ஸ்டுடியோவில் திருமண விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 5 ஏப் 2022