மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது சரியா, தவறா?

மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது சரியா, தவறா?

எமினென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'இயல்வது கரவேல்'.

பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், இந்தப் படத்தில் முதன்மை நாயகனாக நடிக்கிறார். இவருடன் மாஸ்டர் மகேந்திரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவலக்ஷ்மி முதன்முறையாக இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கரு.பழனியப்பன், ஆடுகளம் நரேன், ஸ்மைல் சேட்டை அன்புதாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநரான, எஸ்.எல்.எஸ்.ஹென்றி இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இவர், 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் மற்றும் ‘அண்ணனுக்கு ஜே’ பட இயக்குநர் ராஜ்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்

சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்களின் அரசியலை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது சரியா, தவறா என்பது பற்றி இந்தப் படம் பேசவுள்ளது என்கிறார் இயக்குநர்.

மாஸ்டர் மகேந்திரனை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார்.

நிஜத்தில் கதிரும், மாஸ்டர் மகேந்திரனும் நெருக்கமான நண்பர்கள். இப்படி நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் திரையில் எதிரிகளாக மாறியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது என்கிறார் இயக்குநர்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 5 ஏப் 2022