மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்திய லக்னோ!

ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்திய லக்னோ!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12ஆவது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் தொக்கத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. லக்னோ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஹைதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் குயின்டன் டி காக், எவின் லெவிஸ் தலா ஒரு ரன், மணீஷ் பாண்டே 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர்.

தீபக் ஹூடா 51 ரன்களிலும், கே.எல்.ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர், குருணால் பாண்டியா 6 ரன்னில் வெளியேறினார். 19 ரன்கள் எடுத்த ஆயுஷ் பதோனி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

சன் ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர்.

அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 12 ரன்களில் க்ருனால் சுழலில் சிக்கினார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் - நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடி வந்த பூரன் 34 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்த பந்தில் அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது . இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்று (ஏப்ரல் 5) இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி ஒன்றில் தோல்வியும் ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது.

- ராஜ்-

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

செவ்வாய் 5 ஏப் 2022