மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஏப் 2022

எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி?: கடுப்பான ஸ்ருதி ஹாசன்

எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி?: கடுப்பான ஸ்ருதி ஹாசன்

’எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் கடுப்பாகி உள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலர் சாந்தனுவின் பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இதற்கடுத்து இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் மூலம் உரையாடி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

அதில் ரசிகர்களது கேள்விக்கு வீடியோ மூலம் பதிலளித்து வந்தார் ஸ்ருதி. அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம், ‘இதுவரை நீங்கள் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள்?’ என்ற கேள்வியை கேட்க இதில் ஸ்ருதி ஹாசன் கடுப்பாகியுள்ளார். இதற்கு வீடியோ மூலம் பதிலளித்த ஸ்ருதி, ‘நான் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தால் உங்களுக்கு என்ன? அதை கண்காணிப்பது உங்கள் வேலை கிடையாது. ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். மூக்கு பகுதியில் மட்டுமே இதுவரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன்’ என பதிலளித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2021ல் வெளிவந்த ‘லாபம்’ படத்தில் நடித்தார் ஸ்ருதி. இதற்கு பின்பு இவரது நடிப்பில் ‘சலார்’ படம் வெளியாக உள்ளது. இது தவிர்த்து ஓடிடி மற்றும் இசையில் ஸ்ருதி கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

திங்கள் 4 ஏப் 2022