மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

ஐபிஎல்: மும்பை அணியை வீழ்த்திய ராஜஸ்தான்!

ஐபிஎல்: மும்பை அணியை வீழ்த்திய ராஜஸ்தான்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 2) மொத்தம் இரு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை அணியை வீழ்த்தி 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

மாலை 3.30 தொடங்கிய ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் படிக்கல் களமிறங்கினார் .

ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசிய பாசில் தம்பியின் ஓவரில் ஜோஸ் பட்லர் சிக்ஸர் மழை பொழிந்தார். 3 சிக்ஸர், 2 பவுண்டரி என அந்த ஓவரில் 26 ரன்களைக் குவித்தார். இதன் பிறகு படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து அணியின் கேப்டன் சாம்சன் களமிறங்கினார். ஒரு புறம் பட்லரும், மறுபுறம் சாம்சனும் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிறப்பாக விளையாடிய சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்

சிக்ஸர், பவுண்டரி என அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது மூன்றாவது ஐபிஎல் சதம் ஆகும். பின்னர் வந்த ஹெட்மயர் 17ஆவது ஓவரை வீசிய பொல்லார்டின் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசினார். சிறப்பாக விளையாடிய பட்லர் 100 ரன்களிலும் ,ஹெட்மயர் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது . இதைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் ரோஹித் சர்மா - அன்மோல்ப்ரீத் சிங்க் ஆகியோர் ஆட்டமிழந்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் ,திலக் வர்மா இருவரும் சேர்ந்து ரன்களை அதிரடியாகக் குவித்தனர் .சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர்.

ஒருகட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது இஷான் கிஷன் 54 ரன்களிலும் திலக் வர்மா 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது .

இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது.

- ராஜ்-

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

ஞாயிறு 3 ஏப் 2022