மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித்குமார்: ஏன்?

ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித்குமார்: ஏன்?

வலிமை படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

அஜித்துக்கு இதுவரை 7 ஆபரேஷன்கள் வரை நடந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு தாமதம், படம் வெளியான பின்பு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்கிற தகவல் காரணமாக அஜித்குமார் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித்குமார் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

ஆனால் இந்த வழிபாட்டுக்கு முன்னதாக அஜித்குமார் 15 நாட்கள் பாலக்காடு பகுதியில் உள்ள பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருந்து உடம்புக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை வைத்தியம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த மையத்தில் சிகிச்சை பெறுகிறவர்கள் கடைசி நாளில் சம்பிரதாயமாக கல்பாத்தி விஸ்வநாதர் கோயிலில் வழிபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

அம்பலவாணன்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வெள்ளி 1 ஏப் 2022