மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

'அலோபீசியாவால் பாதிக்கப்பட்டேன்': சமீரா

'அலோபீசியாவால் பாதிக்கப்பட்டேன்': சமீரா

நடிகை சமீரா ரெட்டி அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஆஸ்கர் விருது விழா மேடை வில் ஸ்மித்தால் பேசு பொருளானது. ‘கிங் ரிச்சார்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வென்றார் வில் ஸ்மித். முதல் முறையாக ஆஸ்கர் விருது வாங்குவதால் நடிகர் வில் ஸ்மித் தன் மனைவியுடன் வந்திருந்தார்.

இதே விருது விழா மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவின் ஜடாவை பற்றி உருவ கேலி செய்துவிட இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையிலேயே கிறிஸ் ராக்கை ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜடா அலோபீசியா எனும் கடுமையான முடி உதிர்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மொட்டையடித்துள்ளார். அவருக்கு இப்படியான நோய் இருப்பது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த நிலையில், அது தெரிந்துமே அவரை பொது மேடையில் கிறிஸ் ராக் கேலி செய்தது தான் வில் ஸ்மித்தை கோபப்படுத்தியது. பின்பு தன் செயலுக்காக மன்னிப்பும் கேட்டார் வில்.

பலரும் வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக்கின் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தும் வரும் வேளையில் நடிகை சமீரா ரெட்டி இந்த சம்பவம் பற்றியும், அலோபீசியாவால் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பேசியுள்ளார்.

அதில், “நம் எல்லோருக்குமே தனிப்பட்ட பிரச்சனைகளும் போராட்டங்களும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்ததும் இருக்கிறோம். அதை நாம் பிறரிடம் பகிர்ந்து கொள்வது மற்றவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும். இந்த ஆஸ்கர் சம்பவம் மூலம் நான் அதை தான் செய்ய போகிறேன்.

வில் ஸ்மித் மனைவி ஜடா பாதிக்கப்பட்டுள்ள அலோபீசியா ஏரியாட்டா நோய் ஒரு தன்னியக்க நோய் .அது கூந்தல் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்தி தலையில் வழுக்கை பிரச்சனையை ஏற்படுத்தும். கடந்த 2016ஆம் ஆண்டு என் பின் தலையில் இரண்டு இன்ச் வழுக்கையை கண்டறிந்தேன். அதில் இருந்து ஒரு மாதத்திலேயே இது போல இன்னும் இரண்டு வழுக்கை வந்தது. இதை கையாள்வது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அலோபீசியா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் நிச்சயம் அது அவர்களை உடல் ரீதியாக சோர்வாக்காது மற்றும் தொற்றும் தன்மை கொண்டதும் அல்ல. ஆனால், இதனை உணர்வு ரீதியாக சமாளிப்பது கடினம்” என்கிறார் சமீரா.

இதற்கான சிகிச்சையில் இருந்த போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலனவர்களுக்கு முடி உதிர்வுக்கு பிறகு முடி மீண்டும் அந்த இடத்தில் வளரும். தனக்கு கார்டிகோ ஸ்டீராய்டு ஊசி மூலம் உதிர்ந்த இடத்தில் மெதுவாக முடி மீண்டும் வளர தொடங்கியதாக சமீரா அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நோய் முற்றிலும் குணமாக்க கூடியதும் இல்ல. மேலும் இதற்கான காரணமும் கண்டறிய முடியாது” என்கிறார்.

“பகுதியாக முடி கொட்டுவது, தலை முழுவதும் மற்றும் உடல் முழுவதும் கொட்டுவது என மூன்று வகைகள் இதில் இருக்கிறது. எனக்கு இப்போது முடி ஆரோக்கியமாக இருக்கிறது. ஹோமியோபதி சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனால், மீண்டும் இது எனக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது எனக்கு தெரியும். இந்த பரபரப்பான உலகில் மனிதர்கள் மீது அன்புடம் இருங்கள்” எனவும் கூறியுள்ளார்.

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வியாழன் 31 மா 2022