மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

ரஜினிக்கு கதை சொல்ல சொன்னதே விஜய்தான்: நெல்சன்

ரஜினிக்கு கதை சொல்ல சொன்னதே விஜய்தான்: நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்திற்காக முதன் முறையாக இணைந்துள்ளார். அடுத்த மாதம் 13ஆம் தேதி படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, வில்லனாக இயக்குநர் செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தில் இருந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி உள்ளது.

படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் நெல்சன் தனது அடுத்த படமாக ரஜினியுடன் கைக்கோர்க்கும் படத்திற்கு விஜய்தான் காரணம் என பேசியுள்ளார்.

இது குறித்து நெல்சன், “விஜய் சாரும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். 'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது அவர் என்னிடம், 'ரஜினி சார் தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குநர்களிடம் கதை கேட்டு கொண்டிருக்கிறார். நீங்களும் முயற்சி செய்யுங்கள்” என்றார்.

ஆனால், ரஜினி போன்ற பெரிய நடிகருக்கு நான் கதை சொல்ல தயக்கமாக இருந்தது. ஆனால், அதை எல்லாம் உடைத்து, 'நீங்கள் தைரியமாக கதையை ரெடி பண்ணி அவரிடம் சொல்லுங்கள். 'பீஸ்ட்' முடிந்ததும் ரஜினி படம் தொடங்க சரியாக இருக்கும்” என்றார் விஜய் சார். அவருடைய பாசிட்டிவிட்டி தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்திருக்கிறது” என மனம் திறந்து பேசியிருக்கிறார் நெல்சன்.

ஆதிரா.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 31 மா 2022