மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

‘பாட்னர்’ முதல் பார்வை வெளியீடு!

‘பாட்னர்’ முதல் பார்வை வெளியீடு!

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் முதல் பார்வையை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க, அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோட்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார்.

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

அம்பலவாணன்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

புதன் 30 மா 2022