மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜூனியர் என்டிஆர்

படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.

பாகுபலி 2 வெற்றிக்குப் பிறகு ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியானது ஆர்ஆர்ஆர் திரைப்படம். இப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 562 கோடி ரூபாய் மொத்த வசூல் ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1920களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமாரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். ஏற்கனவே, படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவித்து ராம் சரண் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆரும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. என்னிடம் இருந்த சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி ஜக்கண்ணா. என்னை பன்முகத்தன்மைக் கொண்டவனாக உணர்ந்ததால்தான் உண்மையிலேயே என்னுள் இருந்த சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். தம்பி ராம் சரண் இல்லாமல் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை என்னால் கற்பனை செய்து பார்த்திருக்கவே முடியாது. அதேபோல், உன்னைத் தவிர அல்லூரி சீதாராம ராஜுவின் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல, நீ இல்லாமல் பீம் முழுமையடையாதவராக இருந்திருப்பார். என் தண்ணீருக்கு நெருப்பாக இருந்ததற்கு நன்றி. குறிப்பாக, எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் இதயத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள், ராஜமெளலி, ராம் சரண் உள்ளிட்டோருக்கும் ஆலியா பட்,விஜயேந்திர பிரசாத், டிவிவி தனய்யா, அஜய் தேவ்கான் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 30 மா 2022