மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 மா 2022

ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்த ‘கேஜிஎப்2’!

ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்த  ‘கேஜிஎப்2’!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், ரவீணா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தின் டிரெயலர் மார்ச் 27 அன்று மாலை கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வலைத்தளத்தில் வெளியானது.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த கேஜிஎப் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பை காட்டிலும் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இரண்டாம் பாகத்தின் முதல் டீசர் கடந்த வருடம் 2021 ஜனவரியில் வெளியாகி 248 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.

இப்போது வெளியிடப்பட்டுள்ள டிரெய்லர் ஐந்து மொழிகளும் சேர்த்து 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்தியில் 48 மில்லியன், கன்னடத்தில் 18 மில்லியன், தெலுங்கில் 19 மில்லியன், தமிழில்11 மில்லியன், மலையாளத்தில் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் ஆர்ஆர்ஆர் பட டிரெய்லர் 24 மணி நேரத்தில் 51 மில்லியன் பார்வைகள் பெற்ற சாதனையை 'கேஜிஎப் 2' டிரெய்லர் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று முறியடித்துள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் டீரீம் வாரியர், கேரளாவில் நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் வெளியிடுகின்றனர். அத்துடன் ஏப்ரல் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த விஜய் நடித்துள்ள பீஸ்ட் கேஜிஎஃப் வெளியீட்டால் ஒரு நாள் முன்னதாகவே ரீலீஸ் ஆகிறது.

இவை எல்லாம் கேஜிஎஃப் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 2018ஆம் ஆண்டு குறைவான திரைகளில் வெளியான கேஜிஎஃப் நேரடி தமிழ் படத்திற்குரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. கேஜிஎஃப் இரண்டாம் பாகமும், தமிழ்நாட்டில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதற்கு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை தயாரித்திருப்பது சன்பிக்சர்ஸ், வெளியிடுவது உதயநிதி ஸ்டாலின் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள 70% க்கும் அதிகமான திரைகளை பீஸ்ட் படம் திரையிட ஒப்பந்தம் செய்துவிடுவார்கள். எஞ்சிய 30% திரைகளை நம்பியே கேஜிஎஃப் களமிறங்கவேண்டியுள்ளது இதேபோன்ற நெருக்கடியை கர்நாடக மாநிலத்தில் பீஸ்ட் படம் எதிர்கொள்ள உள்ளது.

இராமானுஜம்

கமலை மிரட்டினேனா: உதயநிதி

8 நிமிட வாசிப்பு

கமலை மிரட்டினேனா: உதயநிதி

தசாவதாரம் 2: கே.எஸ்.ரவிகுமார் சொன்ன தகவல்!

4 நிமிட வாசிப்பு

தசாவதாரம்  2: கே.எஸ்.ரவிகுமார்  சொன்ன தகவல்!

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

2 நிமிட வாசிப்பு

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

செவ்வாய் 29 மா 2022