மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 மா 2022

18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பாலா சூர்யா

18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பாலா சூர்யா

பாலா 'சேது' படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார்.

2001ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்தார். 2003இல் விக்ரம்- சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தை இயக்கிய பாலா, அதன் பின்னர் சூர்யா நடித்த மாயாவி படத்தைத் தயாரித்தார்.

2018ஆம் ஆண்டு ஜோதிகா நடித்த நாச்சியார் படம்தான் தியேட்டரில் வெளியான பாலா இயக்கிய படம். அதன்பின் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமான வர்மா படத்தை இயக்கினார். ஆனால், எதிர்பார்த்த வகையில் படம் இல்லை எனக் கூறி அந்தப் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை.

2020ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. கடந்த நான்கு ஆண்டுகளாக பாலா இயக்கத்தில் தியேட்டருக்கு படம் வரவில்லை என்பதுடன் 18 வருடங்கள் கடந்து சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்குவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் பாலா நெருக்கடியில் சிக்கி மனைவியைவிட்டு சட்டபூர்வமாகப் பிரிந்திருக்கிறார். இந்த நிலையில் தன்னை இயக்குநராக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு ஏற்பட்டுள்ளது.

பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் 28.03.2022 அன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அவரது 2டி நிறுவனத்தின் 19ஆவது தயாரிப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

நந்தா, பிதாமகன் படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்தில் பாலா உருவாக்கியுள்ள திரைக்கதையில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும் என்கிறது பாலா தரப்பு வட்டாரம்.

சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர் சதீஷ் சூர்யா.

இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா... 'மீண்டும் பாலா சாரின் 'ஆக்‌ஷன்' சப்தத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக தனி வீடு ஒன்று கன்னியாகுமரியில் தயார் செய்யப்பட்டுள்ளது. 45 நாட்கள் இங்கு தான் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அம்பலவாணன்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

செவ்வாய் 29 மா 2022