மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 மா 2022

சினிமாவில் இருந்து விலகும் அமீர்கான்?

சினிமாவில் இருந்து விலகும் அமீர்கான்?

தனது குடும்பத்திற்காக சினிமாவை விட்டே விலக முடிவு செய்ததாக அமீர்கான் கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

அமீர்கான் தனது 54ஆவது பிறந்தநாளில் லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்த படம் அமெரிக்க நகைச்சுவை திரைப்படமான 'Forrest Gump'-ன் தழுவலாகும். அமீர் கான் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

2020ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக முடியாமல் போனது.

தற்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்தி திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அமீர்கானின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. அமீர்கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். பின்னர் "லகான்" திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை காதலித்துகடந்த 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.

இரண்டாவது முறையாக காதல் திருமணம் செய்துகொண்ட அமீர்கான் மீண்டும் விவாகரத்து முடிவை தனது இரண்டாவது மனைவியின் ஒப்புதலுடன் 2021ஜூலை மாதம் அறிவித்தார்.

அப்போது 'இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள் என இருவருமே தெரிவித்திருந்தனர்.

அமீர்கான் சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில், “நான் நடிக்க தொடங்கியபோது என் குடும்பம் என்னுடன் மட்டுமே இருக்கிறது என்று நினைத்தேன். அதனால் நான், அவர்களை சாதாரணமாக கருதி, பார்வையாளர்களின் மனதை கவரும் பயணத்தை மேற்கொண்டேன். நான் சுயநலவாதி, என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் என் குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை. இந்த துயரத்தை 57 வது வயதில் உணர்ந்திருக்கிறேன். 86 வயதில் உணர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.. குறைந்தபட்சம் இப்போது என்னால் திருத்த முடியும்” என பேசியுள்ளார்.

இந்த பேச்சு இந்தி திரையுலகில் விவாதப்பொருளாக மாறி வருகிறது.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 28 மா 2022