மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 மா 2022

'பீஸ்ட்' vs 'கே.ஜி.எஃப்2' : யஷ் பதில்!

'பீஸ்ட்' vs 'கே.ஜி.எஃப்2' : யஷ் பதில்!

'பீஸ்ட்' vs 'கே.ஜி.எஃப்' என்பது கிடையாது என நடிகர் யஷ் பேசியுள்ளார்.

நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹிட்டடித்த 'கே.ஜி.எஃப்' படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. கரண் ஜோகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அமைந்திருக்க டிரெய்லரில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது டிரெய்லர்.

டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்வி- பதில் பகுதி நடந்தது. அதில், 'நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 'கே.ஜி.எஃப்' ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இணையத்தில் 'பீஸ்ட்' vs 'கே.ஜி.எஃப்' என பதிவுகள் பார்க்க முடிகிறது. நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் எப்படி சமாளிக்க போகிறீர்கள்?' என கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு யஷ், “முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 'பீஸ்ட்' vs 'கே.ஜி.எஃப்2' என்பது கிடையாது. ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது என்றால் 'பீஸ்ட்' மற்றும் 'கே.ஜி.எஃப்2' என்று தான் பார்க்க வேண்டும். இது சினிமா. அரசியல் களம் கிடையாது. யார் படத்திற்கு அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு. பீஸ்ட், கே.ஜி.எஃப் இரண்டு படங்களையுமே நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நானும் முதல் நாள் போய் 'பீஸ்ட்' படத்தை ரசிகர்களுடன் சென்று பார்ப்பேன். விஜய் போன்ற மாஸ் ஹீரோ அவருக்கென்று ஒரு இடத்தை வைத்திருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன்.

அதுவும் இல்லாமல் போட்டிக்காக நாங்கள் இப்படி படத்தை வெளியிடவில்லை. எட்டு மாதத்திற்கு முன்பே நாங்கள் 'கே.ஜி.எஃப்2' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டோம். அதனால், இரண்டு படங்களையுமே பார்த்து கொண்டாடுங்கள்” என கூறியுள்ளார்.

யஷ்ஷின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிரா.

பட வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயண்ட்!

5 நிமிட வாசிப்பு

பட வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயண்ட்!

மகனின் ‘நெஞ்சுக்கு நீதி’ பார்த்த மு.க.ஸ்டாலின்

1 நிமிட வாசிப்பு

மகனின் ‘நெஞ்சுக்கு நீதி’ பார்த்த மு.க.ஸ்டாலின்

பீஸ்ட் இறுதி காட்சி குறித்து விமர்சனம்!

3 நிமிட வாசிப்பு

பீஸ்ட்  இறுதி காட்சி குறித்து விமர்சனம்!

திங்கள் 28 மா 2022