மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 மா 2022

தம்பதியாகும் நிக்கி கல்ராணி - ஆதி

தம்பதியாகும் நிக்கி கல்ராணி - ஆதி

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் ஆதி 'மிருகம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகை நிக்கி கல்ராணிக்கு அறிமுகம் 'டார்லிங்' படம்.

இருவரும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து வருகின்றனர். இருவருமே இணைந்து 'மரகத நாணயம்' படத்தில் நடித்து இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவரும் அதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

மேலும் இருவருக்கும் கடந்த 24ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. இதை இருவருமே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். இதுகுறித்து இருவருமே, “நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களாக பழகி இப்போது தம்பதியர் ஆகியுள்ளோம். எங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து எங்களது நிச்சயத்தை முடித்து அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என கூறியுள்ளனர்.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!

3 நிமிட வாசிப்பு

லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

7 நிமிட வாசிப்பு

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

2 நிமிட வாசிப்பு

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

ஞாயிறு 27 மா 2022