மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 மா 2022

மீ டூ சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட நடிகர்!

மீ  டூ சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட நடிகர்!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான படம் 'ஒருத் தீ’. வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

ஒருத் தீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் விநாயகனிடம் மீ டூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மீ டூ என்றால் என்ன என்று எதிர் கேள்வி எழுப்பியதுடன் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்தவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா, நான் இதுவரை பத்து பேருடன் செக்ஸ் வைத்துள்ளேன். ஆனால் அவர்களின் அனுமதி பெற்றுத்தான் அதைச் செய்தேன். எனக்கு ஒருவரைப் பிடித்து இருந்தால் அவரிடம் நேரடியாகவே இதுபற்றி கேட்டு விடுவேன். அவர்களுக்கு விருப்பமில்லை என்று அவர்கள் உடனே நோ சொல்லி விடலாமா என்று கூட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

அவரது இந்த பேச்சு நிருபர்களை, குறிப்பாக அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண் நிருபரை மிகவும் சங்கடப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ள அவர், உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு இப்படி நான் பேசவில்லை. அந்த பெண் பத்திரிகையாளருக்கு நான் பேசியதன் மூலம் ஏதாவது சங்கடம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 27 மா 2022