மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக் வீடியோ!

வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக்  வீடியோ!

ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள இடியட் படம், ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனையொட்டி இடியட் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது .

அந்த வீடியோவில் மிர்ச்சி சிவா, ரெடின் கிங்ஸ்லி ஆகிய இருவரும் நடித்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக மிர்ச்சி சிவாவிடம் சொல்கிறார் ரெடின் கிங்ஸ்லி. அப்போது பேய் போன்று அவர்கள் பின்னால் வந்து ரெடின் கிங்ஸ்லியின் காலை பிடிக்கிறது. அதைப் பார்த்து பேய் என்று தெரியாமல் கட்சி தொண்டர் என நினைத்து அதற்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக மிர்ச்சி சிவா கூறுகிறார். அப்போது அந்த பேய் இவர்களைப் பார்த்து சீறுகிறது. அதைப் பார்த்து துணை முதல்வர் பதவி கொடுத்ததும் திமிர் வந்துருச்சு பார்த்தியா? என்று மிர்ச்சி சிவா கூறுவதோடு வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன், நிக்கி கல்ராணி, ஊர்வசி, அக்க்ஷரா கவுடா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

-அம்பலவாணன்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

சனி 26 மா 2022