மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

சிரஞ்சீவி படத்தில் குஷ்பு?

சிரஞ்சீவி படத்தில் குஷ்பு?

பிருத்திவிராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடித்து வெற்றிபெற்ற படம் லூசிபர். இந்த படம் தற்போது தெலுங்கில்" காட்பாதர்" எனும் பெயரில், சிரஞ்சீவி நடிக்க மோகன்ராஜா இயக்கிவருகிறார்.

இதில் நயன்தாரா மற்றும் முக்கிய வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு, சிரஞ்சீவியுடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் சிரஞ்சீவியை எப்போது சந்தித்தாலும் மகிழ்ச்சி தான்.. அந்த அளவுக்கு அன்பான பண்பான நட்பான ஒரு மனிதர் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி நடித்து வரும் காட்பாதர் படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2006-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக குஷ்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

சனி 26 மா 2022