‘மாமனிதன்’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து இசையமைத்துள்ள படம் இது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்.கே. சுரேஷ் வாங்கியுள்ளார். இப்படம் குறித்த ஒரு தகவலை படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டிய பதிவுதான் அது.
ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனை யாவும் முடிந்தது சார். நன்றி,எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்த பிறகே இந்தப் பதிவை சீனு வெளியிட்டுள்ளார்.
அம்பலவாணன்