மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

கமலின் 'விக்ரம்' படத்தில் அமிதாப்?

கமலின் 'விக்ரம்' படத்தில் அமிதாப்?

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் அமிதாப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யுடன் 'மாஸ்டர்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் 'விக்ரம்'. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ், அவருடன் இணைந்திருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக தள்ளி போயிருந்த படப்பிடிப்பு, பல கட்டத்திற்கு பிறகு 110 நாட்களுடன் முடிவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்தில் கமல்ஹாசன் கண் தெரியாத ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அதே வேளையில் அவருக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. லோகேஷின் முந்தைய படங்களான 'கைதி', 'மாநகரம்' போல இரவில் பெரும்பாலான காட்சிகள் இருக்கும்படி 'விக்ரம்' உருவாக்கப்பட்டுள்ளதாம்.

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி, மைனா நந்தினி உள்ளிட்ட மூன்று பேர் ஜோடியாக நடிக்கின்றனர். படம் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், படத்தில் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அமிதாப் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வந்து போகிறார் என்கிறார்கள். ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் படக்குழு தரப்பில் இருந்து வரவில்லை.

ஆதிரா

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

சனி 26 மா 2022