மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

மீ டூ: நடிகரின் சர்ச்சை பேச்சு!

மீ டூ: நடிகரின் சர்ச்சை பேச்சு!

பிரபல மலையாள நடிகரான விநாயகன் ‘மீ டூ’ பற்றி கூறியுள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகன், நவ்யா நாயர் நடிப்பில் உருவான ‘ஒருத்தி’ என்ற மலையாளத் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அதற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விநாயகனும் கலந்து கொண்டார். அப்போது முன்னாள் மாடல் அழகியும், தலித் செயற்பாட்டாளருமான ஒரு பெண் அவர் மீது சுமத்திய ‘மீ டூ’ குற்றச்சாட்டு குறித்துக் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதிலால் மலையாள திரையுலகம் அதிர்ந்துபோய் இருக்கிறது

விநாயகன் பதில் கூறுகிறபோதுமீ டூ என்றால் என்ன? எனக்குத் தெரியாது, அதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன். உங்களுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டதா..! அடுத்து என்ன செய்வீங்க..? நான் ஒரு பெண்ணிடம் உடல் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த பெண்ணிடம் நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதைச் சொல்கிறேன். அதை என் மனைவியிடம் விட்டுவிடுங்கள். முதலில் நீங்கள் உங்கள் முதல் செக்ஸ் உறவினை உங்களது மனைவியுடன்தான் செய்தீர்களா? எல்லோரும் அப்படி இல்லையே.!?ஒரு பெண்ணுடன் நீங்கள் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்? சொல்லுங்கள். அந்தப் பெண்ணை எப்படி நீங்கள் அழைக்கிறீர்கள்..? என் வாழ்க்கையில் நான் பத்து பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். உங்களுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன்..? என்று நான் கேட்ட பத்து பெண்களில் அவளும் ஒருத்தி. நீங்கள் சொல்லும் மீ டூ இதுதானா..?எனக்கு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அந்த பெண்ணிடம் அது குறித்துக் கேட்பேன். அவள் சம்மதம் தெரிவித்தால் அவளுடன் உறவு வைத்துக் கொள்வேன். விருப்பமில்லை என்று சொன்னால் அங்கிருந்து நகன்றுவிடுவேன்.. இதில் மீ டூ எங்கே இருக்கிறது..?என்றார் விநாயகன்.

நடிகர் விநாயகன் இப்படி பேசியதைக் கேட்டு அவரருகில் அமர்ந்திருந்த நடிகை நவ்யா நாயர் பெரும் சங்கடத்திற்குள்ளானார்.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 25 மா 2022