மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

'தளபதி 66' படப்பிடிப்பு எப்போது?

'தளபதி 66' படப்பிடிப்பு எப்போது?

நடிகர் விஜய்யின் 66வது படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் 'பீஸ்ட்'. அடுத்த மாதம் 13ம் தேதி திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது படத்தின் சென்சார் முடிந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' என இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

'பீஸ்ட்' படத்தின் டீசர், ட்ரைய்லருக்கு எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் அதே சமயம் நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்தான பேச்சும் தொடங்கி விட்டது.

'பீஸ்ட்' படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு தமிழ் என பைலிங்குவலாக தனது 66வது படத்தில் நடிக்க இருக்கிறார். வம்சி இயக்கும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

படத்தின் நாயகியாக கமிட் ஆக ராஷ்மிகா மந்தானாவுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் விஜய்க்கு வில்லனாக விவேக் ஓபராயிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. விவேக்குக்கு ஜோடியாக 'பட்டாஸ்' பட நாயகி மேஹ்ரின் பிர்சாடா நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜூம் இந்த படத்தில் இடம்பெறுவார் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'பீஸ்ட்' படத்திற்கு கோவிட் சூழல் காரணமாக ஆடியோ லான்ச் இல்லாத நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே விஜய், தனது 66வது படத்தை தொடங்குவாரா அல்லது ஏப்ரல் மாத இறுதியிலா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆதிரா

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

வெள்ளி 25 மா 2022