மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

சிஎஸ்கே கேப்டன்: தோனி விலகல்!

சிஎஸ்கே கேப்டன்: தோனி விலகல்!

எல்லோ ஆர்மி என ரசிகர்களால் அழைக்கப்படும் சி.எஸ்.கே.அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார்.

தோனி என்றால் சிஎஸ்கே, சிஎஸ்கே என்றால் தோனி. அந்தளவுக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் எம்.எஸ்.தோனி. 2008 முதல் மொத்தம் 12 சீசன்களுக்கு தோனி வழி நடத்தியுள்ளார். 2008 முதல் மொத்தம் 14 ஆண்டுகளில், இடையில் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே தடை செய்யப்பட்டபோது புனே அணிக்காக விளையாடினார்.

சூப்பர் கிங்ஸ் அணி 13ஆவது சீசனில் மட்டுமே தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மற்ற 11 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, அதிக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக சிஎஸ்கே இருக்கிறது. அதுபோன்று தோனி தலைமையின் கீழ் சிஎஸ்கே 9 முறை இறுதிச் சுற்றுக்குச் சென்றுள்ளது. இதில் 2010, 2011, 2018, மற்றும் 2021 என 4 முறை சிஎஸ்கே கோப்பையை வென்றது.

ஐபிஎல் தொடரில் 204 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி, 121 போட்டிகளில் வென்றுள்ளார், 82 போட்டியில் தோல்வியடைந்துள்ளார். ஒரு போட்டி முடிவு இல்லாமல் 59.60 என்ற வெற்றி சதவீதத்துடன் முடிந்தது.

40 வயதாகும் தோனி, 2014-ம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2017ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில், “எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்து, ரவீந்திர ஜடேஜாவை அணியை வழிநடத்தத் தேர்வு செய்துள்ளார். 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸில் அங்கமாக இருக்கும் ஜடேஜா, சிஎஸ்கேவை இனி வழிநடத்துவார்.இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே, கொல்கத்தா இடையிலான போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தோனியின் முடிவு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'ஒரு சகாப்தத்தின் முடிவு #END OF AN ERA' என அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தோனி குறித்த சுவாரஸ்மான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் #END OF AN என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

-பிரியா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 24 மா 2022