மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

முடிவுக்கு வருகிறதா 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்?

முடிவுக்கு வருகிறதா 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்?

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்ணன் , மூன்று தம்பிகள் அவர்களின் மனைவி, மளிகை கடை என கூட்டுக் குடும்ப கதையாக விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் நல்ல இடத்தில் இருக்கிறது.

சீரியல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் சீரியலின் திருப்பமாக முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் எதிர்பாராத தற்கொலை மற்றும் சீரியலில் சத்யமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் இவர்களது அம்மாவாக நடித்து வந்த லட்சுமி கதாப்பாத்திரத்தின் இறப்பு ஆகியவற்றை சொல்லலாம்.

சித்ரா மறைவுக்கு பிறகு முல்லை கதாப்பாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியானது.

வெளியான தகவல் உண்மை தான். ஆனால் தமிழ் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கிடையாது. தெலுங்கில் ஒளிபரப்பாகும் 'வதினம்மா' சீரியல். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் உண்மையில் இந்தி சீரியலின் ரீமேக்காகும். இதே சீரியல் தெலுங்கிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் தனம் கதாப்பாத்திரத்தில் அண்ணியாக நடிக்கும் சுஜிதா தெலுங்கிலும் அதே கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கில் தமிழுக்கு முன்பே தொடங்கி இருந்ததால் அந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழில் இப்போதைக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை முடிக்கும் எண்ணம் இல்லை என்கிறது சீரியல் தரப்பு.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 24 மா 2022