மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

சிவகார்த்திகேயன் படத்தில் உக்ரைன் நடிகை!

சிவகார்த்திகேயன் படத்தில் உக்ரைன் நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர். இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் கே.வி இயக்குகிறார். நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, அருண் விஷ்வா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையுலகில் இணையும் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய பகுதிகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரி சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். தமன் தொடர்ந்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கி வருவதால், சிவகார்த்திகேயனுடன் அவரது கூட்டணி ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரேம்ஜி அமரனும் நடிக்கிறார். முதன் முறையாக பிரேம்ஜி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

நடிகர் தனுஷின் ‘வாத்தி’, விஜய்யின் ‘தளபதி66’ வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 20வது படமான இதுவும் தமிழ் தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி வருகிறது. மேலும், சிவகார்த்திகேயனின் நேரடி தெலுங்கு படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்பு ‘டாக்டர்’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றதும், சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் தனி மார்க்கெட் இருப்பதும் ஒரு காரணம்.

இந்த படம் தவிர்த்து அடுத்து மே மாதம் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படம் வெளியாக இருக்கிறது. மேலும் ‘அயலான்’ குறித்த அப்டேட்டையும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

ஆதிரா, இராமானுஜம்

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

புதன் 23 மா 2022