மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

ஜென்டில்மேனில் நடிக்கும் நயன்தாரா: யார் இவர்?

ஜென்டில்மேனில் நடிக்கும் நயன்தாரா: யார் இவர்?

‘ஜென்டில்மேன்’ படத்தின் கதாநாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க உள்ளார்.

கடந்த 1993ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மது ஆகியோர் நடித்திருந்த படம் ‘ஜென்டில்மேன்’. அப்போது அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அர்ஜூன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு திருப்பு முனையாக இந்த படம் அமைந்தது எனலாம். இந்த படத்தை டி.கே. குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். தற்போது படம் வெளியாகி 29 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோகன் தயாரிப்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசையமைப்பாளராக கீரவாணியை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன். இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என செய்திகள் வெளியான நிலையில், அது நயன்தாரா சக்ரவர்த்தி என்பது தெளிவாகியுள்ளது.

நயன்தாரா சக்ரவர்த்தி குறித்து படக்குழு தெரிவிக்கும் போது, “நயன்தாரா சக்ரவர்த்தி மலையாளத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரம். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து விருதுகளையும் வென்றுள்ளார். படிப்புக்காக சிறிது காலம் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்பொழுது தமிழில் ‘ஜென்டில்மேன்2’ மூலமாக தமிழில் கதாநாயகியாக நடிக்க அறிமுகமாக உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 23 மா 2022